✔️ BIG Launcher மூத்தவர்கள், குழந்தைகள் மற்றும் கண் நோய்கள், இயக்க பிரச்சினைகள் உடையவர்கள் அல்லது சட்ட ரீதியாக பார்வையற்றவர்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு ஏதுவாக ஆக்குகிறது.
✔️ பார்வை குறைபாடுள்ள மற்றும் உடல் ரீதியாக சவாலை எதிர்கொள்ளும் பயனர்கள் எளிமையான மற்றும் எளிதாக படிக்கக்கூடிய இடைத்தளத்தை எளிதாகப் பயன்படுத்தலாம்.
✔️ எந்தவித கவலையும் இல்லாத நேவிகேட்டர் மூலம் ஏதேனும் தவறாக செய்துவிடுவோமோ, எல்லாவற்றையும் இழந்து விடுவோமோ என்ற பயம் இல்லை.
✔️ மேலும் இது உயிரைக் காப்பாற்றக்கூடிய SOS பட்டனைக் கொண்டுள்ளது!

BIG Launcher - உங்கள் புதிய முகப்புத் திரை

☎️ விரிவாக்கப்பட்ட பட்டன்கள் மற்றும் உரைகள் மூலம் கிட்டத்தட்ட எல்லா விதமான Android தொலைபேசி அல்லது டேப்லெட்டின் பயனர் இடைத்தளத்தை மாற்றுகிறது.
👴 அதிகபட்ச அளவிலான வாசிப்பு மற்றும் எளிதான பயன்பாட்டை வழங்குவதற்காக முதியவர்கள் மற்றும் பார்வை குறைபாடு உடையவர்களைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
👉 ஒற்றை தொடுதல்கள் (சிங்கிள் டச்கள்) மூலம் கட்டுப்படுத்தப்படுவதால், பிழைகளுக்கு இடமில்லை.
🛠️ உங்கள் தேவைகளுக்கு பொருந்தக்கூடிய வகையில் எளிதில் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.
🌎 பயன்பாட்டிகள், வலைத்தளங்கள், தொடர்புகள், விட்ஜெட்டுகள் மற்றும் பலவற்றிற்கான ஷார்ட்கட்களை முகப்புத் திரையில் நேரடியாக வைக்கிறது.
📺 பட்டன்களை ஸ்வைப் செய்வதன் மூலம் அல்லது அழுத்துவதன் மூலம் கூடுதல் திரைகளை சேர்க்கலாம் மற்றும் அணுகலாம்.
🔎 உடனடி தேடல் அல்லது மேலே இருக்கும் சமீபத்தில் உபயோகித்த பயன்பாட்டிகளின் பட்டியல் மூலம் பயன்பாட்டிகளை விரைவாகக் கண்டுப்பிடிக்கலாம்.
🔒 நேவிகேஷன் செய்யும்போது பயனர்கள் தொலைந்து போகாமல் பாதுகாக்க நீங்கள் பயன்படுத்த விரும்பாத பயன்பாட்டிகளை மறைத்து வைக்கலாம்.


BIG Apps Suite
முதியவர்கள் மற்றும் பார்வை கோளாறுகள் உள்ளவர்களுக்கான எளிய பயன்பாட்டிகள்.


🔹 Android 10 மற்றும் Android Go-க்கு இணக்கமானது
🔹 100% அணுகக்கூடியது
🔹 அதிகளவில் மாறுபட்ட வண்ணத் திட்டங்கள் மற்றும் மூன்று வெவ்வேறு எழுத்துரு அளவுகள் உங்கள் தொலைபேசியை கண்கண்ணாடி இல்லாமல் பயன்படுத்த உதவுகின்றன.
🔹 கூடுதல் வண்ண தீம்கள் மற்றும் ஐகான் தொகுதிகள் பதிவிறக்கத்திற்கு கிடைக்கின்றன. 
🔹 திரும்ப அழைக்கும் திரை படிப்பானுக்கான கூடுதல் உதவி சட்ட ரீதியாக பார்வையற்ற பயனர்கள் தங்கள் தொலைபேசியை எளிதாகவும் நம்பிக்கையுடனும் பயன்படுத்த உதவுகிறது.
🔹 எல்லா பயன்பாட்டிகளையும் ஒரு வன்பொருள் விசைப்பலகை (கீபோர்ட்) மூலமாகவோ அல்லது டெக்லா சக்கர நாற்காலி இடைத்தளம் வழியாகவோ கட்டுப்படுத்தலாம், இந்த வசதி மூலம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பயனர்கள் திரையைத் தொடாமல் ஸ்மார்ட்போனின் முழுமையான மற்றும் துல்லியமான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க முடியும்.
🔹 Android 2.2 அல்லது அதற்கு மேற்பட்டவற்றுடன் இணக்கமானது. BIG SMS பயன்பாட்டிக்கு Android 4.4 அல்லது அதற்கு மேற்பட்டது தேவை
இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்! BIG Phone
தொலைபேசி மற்றும் தொடர்புகளைப் பயன்படுத்த எளிதானது


📞 அடிப்படை தொலைபேசி பயன்பாடுகளை (விரிவாக்கப்பட்ட டயலர் உட்பட) எளிமையான இடைத்தளத்தில் அணுகலாம்.
🔎 பெரிய உரைகள் மற்றும் நிறத்தால்-குறியிடப்பட்ட ஐகான்கள் உருப்படிகளை எளிதாக வேறுபடுத்தி அறிய உதவுகின்றன.
🧑 ஒற்றை மெனுவிலிருந்து(பட்டியலிலிருந்து) பிடித்த தொடர்புகளை விரைவாக அணுகலாம்.
🤳 வரும் அழைப்பை எடுப்பது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது; அழைப்புத் திரைக்கு நன்றி.
🌎 அழைப்பு வரலாற்றில் உலாவி, எளிதான முறையில் திரும்ப அழைக்கலாம் அல்லது குறுஞ்செய்திகள் மூலம் பதிலளிக்கலாம்
இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்! BIG SMS
பெரிய எழுத்துருக்களுடன் குறுஞ்செய்தி அனுப்பும் எடிட்டர் 


💬 செய்தி கோர்வையைக் காண்பிக்கப் பயன்படுத்தப்படும் பெரிய எழுத்துரு மற்றும் வெவ்வேறு நிறங்கள்
✉️ விருப்பத்தின் பேரிலான முழுத்திரை எஸ்.எம்.எஸ். 
🔔 அறிவிப்புகள் விரைவாக திரும்ப அழைக்க அல்லது குறுஞ்செய்திக்கு பதிலளிக்க உங்களுக்கு உதவுகின்றன (Android 10 அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் இந்த வசதி இல்லை).
🚫 மல்டிமீடியா குறுஞ்செய்திகளை (எம்.எம்.எஸ்) இந்த வசதி ஆதரிக்கவில்லை என்பதை தயவு செய்து நினைவில் கொள்க.
இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்! BIG Alarm
அவ்வளவு எளிமையான அலாரம்


🎨 அதிகளவில் மாறுபட்ட வண்ணத் திட்டம்
🐘 அலாரத்தை மாற்றுவதற்கான பெரிய பட்டன்கள்
⏰ ஒரு முறை அடிக்கும் அலாரம், அல்லது தினமும் மீண்டும் மீண்டும் அடிக்கும் அலாரம்
😊 வேறு எந்த சிக்கலான அம்சங்களும் சேர்க்கப்படவில்லை, இது மிகவும் எளிது!
இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்! BIG Notifications
எல்லா Android அறிவிப்புகளையும் பெரிதாக காண்பிக்கிறது


🔍 மேல் இருக்கும் நிலை பட்டியில் அறிவிப்புகளை விரிவுபடுத்தி பெரிதாக காண்பிக்கிறது.
📲 எல்லா பொதுவான பயன்பாட்டிகளிலும் வேலை செய்கிறது
💥 புதிய அறிவிப்புகளின் தானியங்கி விரிவாக்கம்
👍 செயல்பாட்டு அறிவிப்பு பொத்தான்கள் உட்பட

Questions? Problems? See the help and tutorials here.
CNETCNET: “For anyone who's ever squinted at a smartphone screen, or just wished for an easier interface, this is (money) very well spent.”

🌍 BIG Launcher பின்வரும் மொழிகளில் கிடைக்கிறது: հայերէն, azərbaycan dili, বাংলা , български, 简体中文, 繁體中文, hrvatski, česky, dansk, nederlands, english, eesti, suomi, français, deutsch, ελληνικά, halshen hausa, हिन्दी, magyar, bahasa indonesia, italiano, 日本語, basa jawa 한국어, kurdî, latviešu, lietuvių, bahasa melayu, norsk, polski, português, português brasileiro, ਪੰਜਾਬੀ, română, русский, српски, srpski, slovenčina, slovenščina, español, svenska, தமிழ், తెలుగు, ภาษาไทย, türkçe, українська мова, tiếng việt, العربية, עברית, فارسی, پن٘جابی, اُردُو

Jennifer, 32: "My mom was always afraid of technology. With BIG Launcher, she can finally use a mobile phone without a doubt. It just changed her smartphone into a simple senior phone."
Ronald, 52: "When I need to make a phone call, I don't want to swipe through the screens full of icons. Thanks to BIG Launcher my phone is simply fast and effective."