BIG Launcher / BIG Phone / BIG SMS ஐ எவ்வாறு பதிவிறக்கி நிறுவலாம்
இயல்புநிலை முகப்புத் திரையாக BIG Launcher ஐ எவ்வாறு அமைப்பது
BIG Launcher விருப்பத்தேர்வுகள் மெனுவைக் காண்பிப்பது எப்படி
Android 10 இல் BIG Launcher / BIG SMS இல் SMS அறிவிப்புகளை எவ்வாறு அமைப்பது
வாட்ஸ்அப், ஜிமெயில் போன்ற பிற பயன்பாடுகளுக்கு BIG Launcher இல் ஒளிரும் பொத்தானை எவ்வாறு இயக்குவது.
BIG Launcher இல் மொழியை எவ்வாறு மாற்றுவது (திரையில் உங்களுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும்)
BIG Launcher இல் கூடுதல் திரைகளை எவ்வாறு சேர்ப்பது மற்றும் பொத்தான்களைத் தனிப்பயனாக்குவது
அசல் செயல்பாட்டை BIG Launcher இல் முகப்புத் திரை பொத்தானுக்கு எவ்வாறு திருப்புவது
BIG Launcher / BIG Phone / BIG SMS இன் வண்ண தீம் மாற்றுவது எப்படி
BIG Launcher திரையில் பின்னணி படத்தை எவ்வாறு சேர்ப்பது
“தொந்தரவு செய்யாதீர்கள்” பயன்முறையை எவ்வாறு அமைப்பது
BIG Phone இல் தொடர்புக்கு அழைக்கும் போது காட்டப்படும் மெனுவை எவ்வாறு எளிதாக்குவது அல்லது முடக்குவது
BIG Phone இல் எண்ணை டயல் செய்யும் போது காட்டப்படும் மெனுவை எவ்வாறு முடக்கலாம்
BIG SMS இல் ஒரு கிளிப்போர்டுக்கு செய்தி உரையை எவ்வாறு நகலெடுப்பது
BIG Phone / BIG SMS இல் “விருப்பத்தேர்வுகள்” மெனு உருப்படியை எவ்வாறு மறைப்பது
BIG Launcher / BIG Phone / BIG SMS இன் முழு பதிப்பின் விலை என்ன?
BIG Launcher / BIG Phone / BIG SMS ஐ எவ்வாறு வாங்குவது
BIG Launcher / BIG Phone / BIG SMS இன் முழு பதிப்பிற்கான உரிமத்தை எவ்வாறு மீட்டெடுப்பது
BIG Launcher ஐ எவ்வாறு நிறுவல் நீக்குவது
உங்கள் கிரெடிட் கார்டை கூகுள் கணக்கில் எப்படி சேர்ப்பது மற்றும் அதை மீண்டும் எப்படி அகற்றுவது
கடவுச்சொல் மூலம் BIG Launcher உடைய விருப்பங்களை எவ்வாறு பாதுகாப்பது
புதிய எஸ்.எம்.எஸ். செய்தி இல்லாவிட்டாலும், BIG Launcher-இல் எஸ்.எம்.எஸ் பட்டனை ஒளிரச் செய்வது எப்படி
BIG Launcher -இல் உள்ள முகப்புத் திரை பட்டன்களில் ஒன்றுக்கு தொடர்பை எவ்வாறு நியமிப்பது
BIG Launcher-இல் முகப்புத் திரை பட்டன்களை எவ்வாறு தனிப்பயனாக்குவது
BIG Launcher / BIG Phone / BIG SMS இன் இலவச பதிப்பின் வரையறைகள் யாவை?
BIG Launcher பயனர் கையேடு (ஆங்கிலம் மட்டும்)
Read the User Manual online (English only) Download the User Manual as PDF fileBIG Launcher பயன்பாட்டியை இயல்புநிலை துவக்கியாக எவ்வாறு அமைப்பது?
பயன்பாட்டியை நிறுவிய பின் முகப்பு பட்டனை அழுத்தும்போது, இருக்கின்ற எல்லாவற்றிலிருந்தும் இயல்புநிலை துவக்கியைத் தேர்வுசெய்ய உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். 'இயல்புநிலையாகப் பயன்படுத்துக' அல்லது ‘எப்போதும்’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதை உறுதிசெய்க. இந்த பட்டியல் தோன்றவில்லை என்றால், நீங்கள் அதை கைமுறையாக செய்ய வேண்டும் - பட்டியல் பட்டனை அழுத்தி, அமைப்புகள் »பயன்பாட்டிகள்» இயல்புநிலை பயன்பாட்டிகள் »முகப்புத் திரை என்பவற்றுக்குச் சென்று “BIG Launcher” என்பதைத் தேர்வுசெய்க.
எனது பழைய துவக்க பயன்பாட்டிக்கு நான் எவ்வாறு திரும்ப செல்வது?
விருப்பத்தேர்வுகளில் இயல்புநிலை துவக்கி அமைப்பை நீங்கள் மீட்டமைக்கலாம். இது வேலை செய்யவில்லை என்றால், பட்டியல் பட்டனை அழுத்தி, அமைப்புகள் »பயன்பாட்டிகள்» இயல்புநிலை பயன்பாட்டிகள் » முகப்புத் திரை என்பவற்றுக்குச் செல்லவும்.
நான் முன்பு BIG Launcher பயன்பாட்டியை வாங்கினேன், இப்போது என்னிடம் இலவச பதிப்பு மட்டுமே உள்ளது. எனது உரிமத்தை எவ்வாறு திரும்பப்பெறுவது?
உங்கள் ஆர்டர் எண் (வாங்கியபின் நீங்கள் பெற்ற மின்னஞ்சல் ரசீதில் இருக்கும்) மற்றும் வாங்குவதற்கு நீங்கள் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை எங்களுக்கு அனுப்புங்கள், மேலும் அனைத்து BIG Apps Suite பயன்பாட்டிகளுக்கும் உங்கள் உரிமத்தை இலவசமாக நீங்கள் திரும்பப்பெற நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.
BIG Launcher பயன்பாட்டி 3 தனித்தனி பயன்பாட்டிகளாக ஏன் பிரிக்கப்பட்டது?
மார்ச் 9, 2019 அன்று, ஒரு புதிய அனுமதிக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது, இது அனைத்து Google Play Store பயன்பாட்டிகளுக்கும் பொருந்தும். அப்போதிலிருந்து, BIG Launcher (ஒரு துவக்கியாக) பயன்பாட்டியால் இனி எஸ்.எம்.எஸ். செய்திகளையும் தொலைபேசி அழைப்புகளையும் அணுக இயலாது, ஏனெனில் இந்த அனுமதிகள் அவற்றின் முதன்மை செயல்பாடாக இருக்கும் பயன்பாட்டிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டன - துவக்கிகளுக்கு அல்ல. இந்தக் கொள்கைக்கு இணங்க, BIG Launcher பயன்பாட்டியிலிருந்து தொடர்புடைய அம்சங்கள் அகற்றப்பட்டு தனி பயன்பாட்டிகளான BIG Phone மற்றும் BIG SMS பயன்பாட்டியில் அமைக்கப்பட்டன. நீங்கள் அவற்றை தனித்தனியாக பதிவிறக்கி நிறுவ வேண்டும்.
BIG Launcher பயன்பாட்டியில் பல திரைகளை எவ்வாறு அமைப்பது?
விருப்பத்தேர்வுகள் பட்டியில் நீங்கள் பல திரைகளை அமைத்துக்கொள்ளலாம். நீங்கள் புதிதாக உருவாக்கிய திரைகளை ஏற்கனவே இருக்கும் பட்டன்களுடன் இணைக்க வேண்டும், இல்லையெனில், அவற்றை நீங்கள் அணுக முடியாது. அல்லது விருப்பத்தேர்வுகள் பட்டியில் திரைகளுக்கு இடையில் ஸ்வைப் செய்வதற்கான விருப்பத்தை நீங்கள் இயக்கலாம் (ஆன் செய்யலாம்). மேலும் விவரங்களுக்கு பயனர் கையேட்டைப் படிக்கவும்.
குறுஞ்செய்தி / தொடர்பு / அழைப்பு பதிவுகளை எவ்வாறு அழிப்பது?
பாதுகாப்பு காரணங்களால், இயல்பாக அழிப்பது முடக்கப்பட்டுள்ளது. விருப்பத்தேர்வுகளில் உள்ள தொடர்புடைய பிரிவுகளில் குறிப்பிட்ட உருப்படிகளின் அழிக்கும் வசதியை நீங்கள் இயக்கலாம் (ஆன் செய்யலாம்). மேலும் விவரங்களுக்கு பயனர் கையேட்டைப் படிக்கவும்.
வரும் அழைப்பில் அழைப்பு ஒலி இல்லை.
விருப்பத்தேர்வுகள் »தொலைபேசி என்பவற்றுக்குச் சென்று, “சரிசெய்க: அழைப்பு ஒலி இல்லை” என்ற விருப்பத்தை இயக்கவும். இது உதவவில்லை என்றால், contact@biglauncher.com என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்புக்கொள்ளுங்கள்.
எஸ்.எம்,எஸ். செய்திகள் எதுவும் வருவதில்லை.
விருப்பத்தேர்வுகள் » குறுஞ்செய்திகள் என்பவற்றுக்குச் சென்று, “சரிசெய்க: மாற்று எஸ்.எம்.எஸ். பெறுநர்” என்ற விருப்பத்தை இயக்கவும். இது உதவவில்லை என்றால், contact@biglauncher.com என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்புக்கொள்ளுங்கள்.
Whatsapp, Gmail, Facebook Messanger போன்ற பிற பயன்பாட்டிகளுக்கு ஒளிரும் பட்டனை எவ்வாறு இயக்குவது?
இயக்கப்பட்டவுடன், ஏதேனும் மூன்றாம் தரப்பு பயன்பாட்டியில் அறிவிப்பு வந்தால், அந்த பயன்பாட்டி BIG Launcher உடைய பட்டன்களில் ஒன்றிற்கு ஒதுக்கப்பட்டு, அதற்கு ஷார்ட்கட் அமைக்கப்பட்டு இருந்தால், நீங்கள் அந்த பயன்பாட்டியைத் திறக்கும் வரை அந்த அறிவிப்பு ஒளிரும். இந்த அம்சத்தை இயக்க, விருப்பத்தேர்வுகள்»திரைகள்’ விருப்பத்தேர்வுகள் என்பதற்குச் சென்று, “ஒரு பயன்பாட்டி அறிவிப்பைக் காண்பிக்கும் போது ஒளிரும் பட்டன்” என்பதை இயக்கவும் (ஆன் செய்யவும்). பின்வரும் திரையில், BIG Launcher பயன்பாட்டிக்கான அறிவிப்பு அணுகலை இயக்கவும்.
வரும் எஸ்.எம்.எஸ் அறிவிப்பு ஒலியை எவ்வாறு அமைப்பது அல்லது அணைப்பது?
அமைப்புகள் »பயன்பாட்டிகள் என்பதற்குச் செல்லவும். “முதியவர்களுக்கான BIG SMS” பயன்பாட்டியைக் கண்டுபிடித்து, அதைத் தேர்ந்தெடுத்து அடுத்த திரையில் “அறிவிப்புகள்” என்பதைத் தேர்வுசெய்க.
அலாரத்தை எவ்வாறு அமைப்பது?
முகப்புத் திரையில் கடிகாரம் அல்லது தேதியைத் தொடவும். ஏதேனும் அலாரம் அமைக்கப்பட்டால், கடிகாரத்திற்கு அடுத்ததாக பெல் ஐகான் காட்டப்படும். BIG Launcher உடைய பட்டன் எடிட்டரில் வேறு அலாரம் பயன்பாட்டியை நீங்கள் ஒதுக்கலாம்.
BIG Apps Suite உடைய இலவச பதிப்புகளின் வரையறைகள் யாவை?
BIG Launcher இலவச பதிப்பின் வரையறைகள்
- பட்டன்களின் வலது பக்க நெடுவரிசையை மட்டுமே நீங்கள் தனிப்பயனாக்கிக்கொள்ள முடியும்
- 5 கூடுதல் திரைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்
- உள்ளமைவு மற்றும் விருப்பத்தேர்வுகளின் கடவுச்சொல் பாதுகாப்பு சாத்தியமில்லை
- முழு பதிப்பை வாங்க நினைவூட்டும் திரை அவ்வப்போது காட்டப்படும்
BIG Phone இலவச பதிப்பின் வரையறைகள்
- அழைப்பு பதிவில் மிகச் சமீபத்திய 5 அழைப்புகள் மட்டுமே தெரியும்
- தொலைபேசி அழைப்பின் போது விசைப்பலகை முடக்கப்பட்டிருக்கும்
BIG SMS இலவச பதிப்பின் வரையறைகள்
- மிகச் சமீபத்திய 5 குறுஞ்செய்தி பிரிவுகள் மட்டுமே தெரியும்
- 20 குறுஞ்செய்திகள் அனுப்பியபின் biglauncher.com வலைத்தளத்திற்கான இணைப்பு ஒவ்வொரு குறுஞ்செய்தியிலும் சேர்க்கப்படும்